
முதல் கிறிஸ்துமஸ் மரம், ஜெர்மனி நாட்டில், லால்வியாவில் உள்ள ரிகா என்ற இடத்தில், 1510ல் வைக்கப்பட்டது
* ஒரே கிறிஸ்துமஸ் மரத்தை, அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்
* கிறிஸ்துமஸ் மரங்களாக, 'ஸ்காட்ச் பைன், டக்ளஸ்பிர், பிரேசர்பிர்' ஆகியவை பயன்படுத்தபடுகின்றன
* அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில், 1856ல், முதல் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டது. 1923லிருந்து, மரத்தில் விளக்குகள் பொருத்த ஆரம்பித்தனர்
* இதுவரை வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களிலேயே மிக விலை உயர்ந்தது, யுனைடெட் அரபு எமிரேட்சில் வைக்கப்பட்டதாகும். இதன் மதிப்பு, 11 லட்சத்து, 26 ஆயிரத்து, 900 டாலர் (இந்திய மதிப்பில், ஒரு டாலர், 70 ரூபாய்)
* மரத்தின் உச்சியில், முக்கோணம் அல்லது நட்சத்திரம் வைப்பது, காலம் காலமாக தொடர்கிறது
* கடந்த, 1948லிருந்து தான், பொது இடங்களில் கிறிஸ்துமஸ் மரம் வைக்க துவங்கினர்
* ஜெர்மன், போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில், கிறிஸ்துமஸ் மரத்தில், கூடுதலாக ஒரு சிலந்தி மற்றும் சிலந்தி கூடு இருக்கும். இவை பிளாஸ்டிக்கால் ஆனது. இப்படி வைத்தால், அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை
* அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மரம் வைப்பர். இதை, வெட்டி எடுத்து வந்து அலங்கரித்து பராமரிக்கும் செலவு மட்டும், பல லட்சம் ரூபாய் ஆகும்.

