PUBLISHED ON : நவ 23, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரளாவில், ஆண்களுக்கு இணையாக அவர்களுடன் போட்டி போட்டு, தென்னை மரம் ஏறி, தேங்காய் பறிக்கின்றனர் மலப்புறத்தை சேர்ந்த பெண்கள். மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கு ஆட்கள் கிடைக்காததால், மலப்புறத்தில் மட்டும் பல நுாறு பெண்கள் மரம் ஏறும் பயிற்சி பெற்றுள்ளனர். ஒரு போன் செய்தால், இரு சக்கர வாகனங்களில் வீட்டுக்கு வரும் இவர்கள், மரம் ஏறும் கருவியின் உதவியுடன் மரம் ஏறி, தேங்காய் பறித்து தருகின்றனர். இரண்டரை மணி நேரம் வேலைக்கு, 1,000 ரூபாய் வாங்குகின்றனர். இதனால், ஆசிரியர்கள், அலுவலகத்தில் பணிப் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து துறையினரும், தேங்காய் பறிக்கும் பணிக்கு வந்து விடுகின்றனர்.
— ஜோல்னாபையன்.

