PUBLISHED ON : நவ 23, 2014

பணத்தை அள்ளிக் குவிக்கும் சில தொழிலதிபர்களுக்கு, அவ்வப்போது ஏதாவது விபரீத ஆசை தோன்றுவதுண்டு. அப்படி தோன்றியதுதான், பஸ்சை, நடமாடும், 'நைட் கிளப்'பாக மாற்றும் யோசனையும்!
ரஷ்யாவில், செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு அரசு பேருந்தை, இனி, அது பயணத்துக்கு உதவாது என்று ஓரம் கட்டிவிட்டனர். அந்த பஸ்சை குறைந்த விலைக்கு வாங்கினர் அங்குள்ள சில கோடீஸ்வர தொழிலதிபர்கள்.
லண்டன் மற்றும் நியூயார்க் நகரைச் சேர்ந்த கட்டட உள் அலங்கார வடிவமைப்பாளர்களை வரவழைத்து, பல கோடி ரூபாய் செலவு செய்து, அட்டகாசமான நடமாடும் இரவு விடுதியாக மாற்றி விட்டனர்.
இதில், நடனமாடுவதற்கான தளம், ஹால், கழிப்பறை, மதுபான விடுதி என, அனைத்து வசதிகளும் உள்ளன.
பஸ்சின் வெளிப்புறம் தங்க நிற தகடுகளாலும், பஸ்சின் மேல் தளம் கண்ணாடியாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, உயர்தர சோபா, 'டிவி' உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த நடமாடும் இரவு விடுதியில், இரவுப் பொழுதை போக்குவதற்காக, பணக்காரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
— ஜோல்னாபையன்.

