
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகராஜ பாகவதரிலிருந்து சிவகார்த்திகேயன் வரை, அனைவரின் படங்களையும் பார்த்து வருகிறேன். ஆயிரக்கணக்கான படங்கள், பல்லாயிரக்கணக்கான சினிமா நட்சத்திரங்கள்! இந்தக் கலைஞர்களும், அவர்களின் திறமையை ரசித்தவர்களும் மறைந்து விட்டதுடன், மறைந்தும் வருகின்றனர்.
இதைப்பற்றி பேசும் போது நண்பன் நாராயணன், 'இந்த சினிமாக்காரர்கள் எல்லாம் சூரியனா என்ன? நிலைத்து நிற்காத அவர்களை, நட்சத்திரங்கள் என்று சொல்வது பொருத்தமற்றது. இசைக்கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் என்று ரகப்படுத்துவது போல நடிப்பு கலைஞர்கள் என்று சொன்னால் போதுமே...' என்றான்.
— பாக்கியம் ராமசாமி

