sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கடமை உணர்வு!

/

கடமை உணர்வு!

கடமை உணர்வு!

கடமை உணர்வு!


PUBLISHED ON : நவ 23, 2014

Google News

PUBLISHED ON : நவ 23, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சில ஆண்டுகளுக்கு முன், எர்ணாகுளம் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், திருட்டுக் குற்றம் சாட்டப் பட்ட தமிழ் நாடோடி பெண் ஒருவர், அழும் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு சோகமாக நின்றிருந்தார். குழந்தையின் அழுகுரல் அதிகமாக இருந்தது. அதை கவனித்த நீதிபதி எஸ்.எச்.பஞ்சாபகேசன், குழந்தை பற்றி அப் பெண்ணிடம் விசாரித்தார். 'இவன் என் குழந்தைதான்...' என்றார் அப்பெண். அவள் பொய் சொல்கிறாள் என்பதை உணர்ந்த நீதிபதி, குழந்தையை, சாயி அனாதை இல்லத்தில் தங்க வைத்து படிக்க ஏற்பாடு செய்தார்.

ஆண்டுகள் பல ஓடியது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் சாயி கிராம இன்ஜினியரிங் கல்லுாரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் நீதிபதி எஸ்.எச்.பஞ்சாபகேசன். அங்கு தான் அனாதை இல்லத்தில் சேர்த்த குழந்தை, வாலிபனாக காட்சியளித்தார். அக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவனாக இருந்த அவனை கட்டிப்பிடித்து மகிழ்ந்தார் நீதிபதி.

அன்று அவர் கடமை உணர்வுடன் செயல்பட்டதால், ஒரு குழந்தை சமூக விரோத செயல்களில் இருந்து தப்பித்து விட்டது.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us