
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இமாச்சல் பிரதேசம் என்றாலே பனியால் மூடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதிக பனிபொழிவு காரணமாக, அக்டோபர் மாதம் முதல் அனைத்து கோவில்களையும் மூடி விடுவர். டிசம்பரில், கோவில்களும், வீடுகளும் இருந்த இடம் தெரியாமல் பனி மூடி விடும்.
கடல் மட்டத்திலிருந்து, 10 ஆயிரத்து, 60 அடி உயரே இருக்கிறது, 'தாச்சி' என்ற ஊர். இங்குள்ள, ஷெட்டி நாக் கோவில், பனியால் முற்றிலும் மூடி விடுவதால், இதன் அருகே யாரும் போக மாட்டார்கள்.
கடும் குளிர் காலத்தில் இங்குள்ளவர்கள், 'தேசி தாரு' என்ற பானத்தை காய்ச்சி குடிக்கின்றனர். இங்கு, அதிகமாக கிடைக்கும், ஆப்ரிகாட் பழங்களுடன், வெல்லம் சேர்த்து, அதை பானைகளில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் நாட்டு சாராயம் தான், குளிரை விரட்டும், தேசி தாரு என்ற பானம்.
— ஜோல்னாபையன்

