PUBLISHED ON : ஏப் 19, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலர் திருவிழா என்றால், நம் ஊரில் நடக்கும் மலர் கண்காட்சி போல் நினைத்து விடாதீர்கள். சீனாவில், லிஜாங் என்ற இடத்தில் நடைபெற்ற மலர் திருவிழாவில், பல வகையான உணவு வகைகளையும், நொறுக்கு தீனிகளையும், மலர்களை கொண்டு சமைத்து, விருந்தினர்களை அசத்துகின்றனர்.
அதுவும், அந்த அன்னமிட்ட கைகளுக்கு சொந்தக்காரர்கள், அழகிகள். சுவைக்கு கேட்கணுமா... இவற்றில், தாமரை, வாழைப்பூ, மல்லிகை பூவும் அடக்கம்.
'மலர்களால் சமையல் சாதம், அதுவே எனக்கு போதும். ஹ ஹ ஹா...' என, சுவைத்த விருந்தினர்களும், சந்தோஷத்தில் பாடுவர்.
— ஜோல்னாபையன்