PUBLISHED ON : ஏப் 19, 2020

வட அமெரிக்காவின், மிசிசிபியில் உள்ள, ஒரு கிராமத்தில், திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்ற தாய்க்கு கிடைக்கும் அரசு உதவியில், வாழ்ந்து வந்தனர், பெண்ணும், அவரது மகளும். அச்சிறுமி, ௯ வயதிலிருந்து, பலரால் கற்பழிக்கப்பட்டு வந்துள்ளாள். 14வது வயதில், கர்ப்பமாகி குழந்தையை பெற்றார். ஆனால், அந்த சிசு இறந்தே பிறந்தது. 20 வயதில், போதைக்கு அடிமையானவள், அழகி போட்டியில், கறுப்பு அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று, உலகம் போற்றும் பிரபலமாகி விட்டார். அமெரிக்க, 'டிவி' சேனலில், லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த, ஓப்ரா வின்ஸ்பிரெ, 37 ஆயிரம் பேரை நேர்காணல் செய்திருக்கிறார். இளம் வயதில், பல கொடுமைகளுக்கு ஆளானவர், இன்று, 'ஹாலிவுட்' படங்கள் தயாரிக்கும் தகுதியை பெற்றிருக்கிறார்; ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார், ஓப்ரா.
— ஜோல்னாபையன்.