தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* குழம்பு வைக்க வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கி, அதன் பின், தக்காளியை சேர்த்து வதக்கினால் குழம்பின் ருசி அதிகமாகும்

* கடலை மாவு, சுக்கு துாள், ஓமம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, மீந்து போன உப்புமாவை உருண்டைகளாக உருட்டி, பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தால், சுவையான போண்டா தயார்

* பாயசம் நீர்த்துப் போனால், அதில் வாழைப் பழத்தை பிசைந்து போட்டு, சிறிது தேனும் கலந்து விட்டால், சுவையாகவும், திக்காகவும் இருக்கும்

* பாகற்காய் பொரியல் செய்யும்போது கொஞ்சம் தயிர் ஊற்றி ஊற விட்டு, சிறிது நேரம் கழித்து வதக்கினால், கசப்பு அதிகமாக இருக்காது

* தக்காளி சட்னிக்கு கொஞ்சம் எள்ளையும் வறுத்து கலந்து அரைத்தால் சுவையாக இருக்கும்

* வாழைக்காய் சிப்ஸ் செய்யும்போது நேரடியாக எண்ணெயில் சீவிப் போட்டால், ஒன்றோடொன்று ஒட்டாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us