
'பிரைட் ரைஸ்' மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, வேக வைத்த கார்ன் முத்துக்களைச் சேர்த்து, செய்து பாருங்கள். முத்து முத்தாக, அழகாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்
* தேங்காய் சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் போன்ற கலந்த சாதங்களை பரிமாறும் முன், மோர் மிளகாயை பொரித்து, பொடி செய்து துாவினால் சுவையாக இருக்கும்
* சீரகம் மற்றும் மிளகு இரண்டையும், நெய்யில் வறுத்து பொடி செய்து, நான்கு அல்லது ஐந்து சிறிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கி, உப்பு கலந்து சாதத்தைப் பிசைந்து வையுங்கள். 'ஜீரா ரைஸ்' தயார்
* கால் கிலோ உருளைக்கிழங்கை, குக்கரில் வேக வைத்து நீரை வடித்து, தோலை உரித்து மசிக்கவும். அத்துடன், மிக்சியில் அரைத்தெடுத்த தக்காளி ஜூஸ், இரண்டு கப் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். தேவையான, கொத்துமல்லி இலை, மிளகுத்துாள் மற்றும் உப்பு சேர்க்கவும். சப்பாத்தி, பூரிக்கு தொட்டு சாப்பிடலாம்.

