தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : மார் 05, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால், அதை தண்ணீருக்குள் போட்டு வைத்து, மூன்று மணி நேரம் கழித்து கூட காய்ச்சலாம்

* பால் காய்ச்ச மறந்து, அது திரிந்து போகுமோ என, சந்தேகம் ஏற்பட்டால், ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து பாலை காய்ச்சினால் திரியாது

* காபி பொடியை போடுவதற்கு முன், பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி, பின்பு உபயோகித்தால், டிகாஷன் கலகலவென்று இறங்கும்

* நெய் எவ்வளவு நாளானாலும், 'பிரஷ்'ஷாக இருக்க, அதில் ஒரு வெல்லத் துண்டை போட்டு வைக்கலாம்

* தக்காளி, எலுமிச்சம்பழம் சீக்கிரம் கெடாமலிருக்க, உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கலாம்

* கோதுமை மாவை நன்கு சலித்து, சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது

* ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால், தயிர் புளிக்காமல் இருக்கும்

* ஆப்பிள் புளிப்பாக இருந்தால், தோல் சீவி, நறுக்கி, உப்பு, மிளகாய் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்

* கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து, சுத்தமான தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்

* குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறு விட்டு, அதில் காய்கறிகளை போட்டு வைத்தால், அப்போது பறித்தது போல், 'பிரஷ்'ஷாக இருக்கும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us