PUBLISHED ON : மார் 05, 2023

அ நிறம் | அளவு
ஆப்ரிக்க நாடுகளுள் ஒன்றான உகாண்டாவை சேர்ந்த, மரியம் என்ற பெண்மணி, 41 வயதில், 44 குழந்தைகளை பெற்று சாதனை தாயாக திகழ்கிறார். இங்குள்ள, கசவோ கிராமத்தில், இவர், தன் குழந்தைகளுடன், வாழ்க்கை நடத்த போராடி வருகிறார்.
'கருத்து வேறுபாடால் பிரிந்து சென்று விட்டார், கணவர். இல்லை எனில், குழந்தைகள் எண்ணிக்கை மேலும் உயர்ந்து இருக்கும்...' என்கிறார்.
மரியம், ஐந்து முறை, ஒரே பிரசவத்தில், நான்கு குழந்தைகளை பிரசவித்தார். தற்போது, 22 ஆண் பிள்ளைகளும், 16 பெண்களும் இருக்கின்றனர்.
முதல் மகனுக்கு, 26 வயது, கடைசி பெண் குழந்தைக்கு, வயது, 7.
— ஜோல்னாபையன்
