PUBLISHED ON : மார் 05, 2023

'ஒரு கோடி ரூபாய் தந்தாலும், 35 ரூபா காசோலையை தரமாட்டேன்...' என்று அடம்பிடித்தவர், காந்திஜியின் உதவியாளர் வி.கல்யாணம்.
கடந்த, 1948ல், காந்திஜியிடம் உதவி கேட்க வந்தார், ஒரு விவசாயி. அவருக்கு உதவ காந்திஜியிடம் அப்போது பணம் இல்லை. அவர் அருகில் இருந்த கல்யாணத்திடம், 35 ரூபாய் கடனாக வாங்கி, விவசாயிக்கு அளித்தார். பிறகு, இந்த தொகைக்கான காசோலையை கொடுத்து, கடனை அடைத்தார்.
அந்த காசோலையை, பாட்னா, சென்ட்ரல் வங்கியில் டெபாசிட் செய்தார், கல்யாணம். அந்த காசோலையில் உள்ள கையெழுத்தின் மதிப்பு தெரியாமல் வங்கியில் போட்டு விட்டேனே என்ற உறுத்தல், கல்யாணத்தை வாட்டி வதைத்தது. உடனே, வங்கிக்கு சென்று, அந்த காசோலையை திரும்ப பெற்றுக் கொண்டார்.
பிற்காலத்தில், '35 ரூபா காசோலைக்கு, ஒரு கோடி தருகிறோம்...' என்று பலர் கூறிய போதும், 'முடியவே முடியாது...' என்று சொல்லி விட்டார், கல்யாணம்.
— ஜோல்னாபையன்
