PUBLISHED ON : ஏப் 23, 2023

அ நிறம் | அளவு
* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது, அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்தால், ஆப்பம் அதிக மென்மையாக இருக்கும்
* பஜ்ஜி மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால், அவலை பொடி செய்து சேர்க்கலாம்
* எந்த வகை உப்புமா செய்தாலும் சரி, இறக்குவதற்கு முன் இரண்டு தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து கிளறினால், சுவையாக இருக்கும்
* உருளை, சேனை, கருணை கிழங்கு சமைக்கும்போது, கடுகுக்கு பதிலாக ஓமம் போட்டு தாளித்தால், வாசனையாக இருக்கும்
* மோர்க்குழம்பில் தேங்காயுடன் வதக்கிய பறங்கிக்காயை சேர்த்து அரைத்துவிட குழம்பு நீர்த்து போகாது.
