/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
இவரது எடை கூடியதற்கும், 'கொரோனா' தான் காரணம்!
/
இவரது எடை கூடியதற்கும், 'கொரோனா' தான் காரணம்!
PUBLISHED ON : ஆக 09, 2020

நம் அண்டை நாடான சீனாவை சேர்ந்தவர், ஜோய். 'கொரோனா' முதல் முதலாக உருவாகிய வூஹான் நகரில் வசிக்கிறார். இவரது உடல் எடை, 180 கிலோவாக இருந்தது.
வேலைக்குச் செல்வது, சிறிய உடற்பயிற்சிகளை செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது போன்ற வேலைகளை, அன்றாடம் செய்து வந்ததன் வாயிலாக, எடையை அதற்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டார்.
ஆனால், வைரசை கட்டுப்படுத்துவதற்காக, வூஹானில் பிறப்பிக்கப்பட்ட மூன்று மாத ஊரடங்கு, இவரை மோசமான நிலைக்கு ஆளாக்கி விட்டது. இந்த மூன்று மாதமும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து, சாப்பிடுவது, துாங்குவது போன்ற வேலைகளை மட்டுமே பார்த்து வந்தார், ஜோய்.
இதனால், இவரது உடல் எடை, மேலும், 100 கிலோ கூடி, இப்போது, 280 கிலோவாக அதிகரித்து விட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
— ஜோல்னாபையன்