PUBLISHED ON : ஆக 09, 2020

சூழ்நிலைக்கு ஏற்ப கடை விரித்து கல்லா கட்டுவது தான், புத்திசாலித்தனமான வியாபாரம் என்பதை நிரூபித்துள்ளார், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில், 'கோவிட் 19 எசென்சியல்' என்ற சூப்பர் மார்க்கெட்டை திறந்துள்ளார். இதில், 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
கிருமி நாசினி, கையுறை, முக கவசம், பிரத்யேக ஷூ, பாதுகாப்பு உடை, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி, சத்து மாத்திரை, சத்து உணவு என, எல்லாமே இங்கு கிடைக்கிறது. இதையடுத்து இந்த கடையில், வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
'கொரோனா காலம் முடிந்து விட்டால் என்ன செய்வீர்கள்...' என, தொழில் அதிபரிடம் கேட்டால், 'அப்போதைக்கு அமெரிக்காவில் என்ன பிரச்னை வருகிறதோ, அதற்கு ஏற்றார்போல் தொழிலை மாற்றி விடுவேன்...' என, நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்.
ஜோல்னாபையன்