sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நல்லவே எண்ணல் வேண்டும்!

/

நல்லவே எண்ணல் வேண்டும்!

நல்லவே எண்ணல் வேண்டும்!

நல்லவே எண்ணல் வேண்டும்!


PUBLISHED ON : டிச 30, 2018

Google News

PUBLISHED ON : டிச 30, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புதிய வாய்ப்புகளில் புதையலெடுங்கள். புதிய இலக்குகளை முடிவு செய்யுங்கள். புதிய தொடர்புகளை பலப்படுத்துங்கள். புதிய திட்டங்களை தீட்டி வையுங்கள்.

* உழைப்பால் நேரத்தையும், சேமிப்பால் பணத்தையும், சிக்கனமாக யார் கையாளுகின்றனரோ, அவர்களே வாழ்க்கையில் சந்தோஷமாய் இருப்பர்.

* வாய்ப்பிற்காக எத்தனை படிகள் வேண்டுமானாலும் ஏறி, இறங்கு. அப்படி ஏறி இறங்கும்போது கிடைக்கும் அனுபவங்களே, நம்பிக்கை சுவடுகள்.

* மவுனமாக யோசியுங்கள். அது தான் பெரும்பாலும் மன அழுத்தத்தை குறைக்கிற உயிர் பாசனம்.

* எல்லா வார்த்தைகளும் வாக்கியங்களை அமைக்கும். ஒரு சில வார்த்தைகள் மட்டும், வாழ்க்கையே அமைத்து விடும்!

* மனம் தளராமல் முயல்பவர்களையே வெற்றி எட்டிப் பிடிக்கிறது. இல்லை, இல்லை... கெட்டியாக பிடிக்கிறது!

* உங்கள் தோல்விக்கான காரணத்தை தேடுவதை விட, உங்கள் வெற்றிக்கான வழித்தடங்களை தேடுங்கள்!

* பகலும், இரவும் பூமியின் சுழற்சி. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் சுழற்சி. விடா முயற்சி மட்டுமே, உங்களின் வளர்ச்சி!

* லட்சியம் தெளிவாக இருந்தால், சோதனையும் ஒரு கவசம் தான். இலக்கு தெளிவாக இருந்தால், வெற்றியும் நம் கைவசம் தான்!

* செல்வத்தை இழந்தால் - எதையும் இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்தால் - ஏதோ சிறியதை இழந்து விட்டீர். ஆனால், குணத்தை இழந்தால் - அனைத்தையும் இழந்து விட்டீர், என்று அர்த்தம்.

* சிந்தித்து பார்க்காத முடிவு, வியர்வை சிந்தாத உழைப்பு, கவனம் இல்லாத செயல் ஆகிய மூன்றும், மனிதனின் உயர்வுக்கு தடையாக அமையக் கூடியவை.






      Dinamalar
      Follow us