/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சந்தன வீரப்பன் பற்றி வெளிவராத ரகசியம்!
/
சந்தன வீரப்பன் பற்றி வெளிவராத ரகசியம்!
PUBLISHED ON : டிச 30, 2018

சந்தன வீரப்பன் மறைந்து, 14 ஆண்டுகள் ஆகின்றன. அவனது மனைவி முத்துலட்சுமி, தன் கணவரின் நிறைவேறாத ஆசை பற்றி சமீபத்தில் கூறினார். அது, 'எங்கள் திருமணத்திற்கு ஒரு ஆண்டுக்கு முன், காட்டை விட்டு வெளியேறி, அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த விரும்பினார். அவருக்கு பரிட்சயமான ராணுவ அதிகாரி ஒருவர், அசாமில் பணியாற்றி வந்தார். அவர் உதவியுடன், 1989ல், அசாம் மாநிலம் சென்று, அமைதியாக வாழும் முயற்சியில், அங்கு, கொஞ்சம் நிலம் வாங்க முடிவு செய்தார்.
'அதன்படி, பணத்துடன் அசாம் சென்ற அவருக்கு, நிலம் பிடித்து விட்டது. ஆனால், எடுத்துச் சென்ற பணம் போதவில்லை; அவரது எண்ணம் ஈடேறவில்லை. எனவே, பந்திப்பூர் காட்டிற்கு திரும்பிய அவர், மீண்டும் மீண்டும் பல கொலைகள் செய்து, பாதுகாப்பு கருதி, காட்டிலேயே தங்கி விட்டார்...' என்கிறார், முத்துலட்சுமி.
— ஜோல்னாபையன்.

