/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
எல்லை தாண்டி, கொடுமையை அனுபவித்தவர்!
/
எல்லை தாண்டி, கொடுமையை அனுபவித்தவர்!
PUBLISHED ON : ஜன 13, 2019

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இருந்து, காலையில், ரிக் ஷா சவாரிக்கு சென்ற கஜானந்த் சர்மா, 36 ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை. இரண்டு மகன்களுடன், மனைவி மக்னிதேவி, மிகவும் கஷ்டத்துடன் வாழத் துவங்கினார். என்ன நடந்தது தெரியுமா? கஜானந்த் சர்மா, ரிக் ஷாவுடன் வழி தவறி, பாகிஸ்தான் எல்லையை கடந்து சென்றிருக்கிறார். அங்கே, இவரை, உளவாளியாக கருதி, சிறையில் அடைத்துள்ளனர். அவர், அனுபவிக்காத கொடுமைகளே இல்லை. 'சுய நினைவின்றி, ஊர் பெயர் தெரியாமல் வாழ்ந்தவரை, இனியும் பராமரிக்க வேண்டாம்...' என்று முடிவு செய்தனர், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள். இதன் விளைவாக, 2018, செப்டம்பரில், இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார், கஜானந்த் சர்மா.
தான் யார் என்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவரிடம், பாக்., ராணுவத்தினர் திணித்த காகிதத்தில், அவர், குறித்த விபரம் எழுதப்பட்டிருந்தது. 1982ல், காணாமல் போன கஜானந்த் சர்மா, நடைபிணமாக கிடைத்ததும், கடவுளுக்கு நன்றி சொன்னார், அவர் மனைவி.
— ஜோல்னாபையன்.

