
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு கப் காபியின் விலை, 1,600 ரூபாய் என்றால், நம்ப முடிகிறதா! உண்மை தான்... 'காபிலுவாக்' என்றழைக்கப்படும் இது, பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. ஒரு கப் காபி, இவ்வளவு ரூபாய் என்றால், காபி கொட்டை விலை எவ்வளவு இருக்கும் என, கேள்வி எழுகிறது அல்லவா! இந்த ரக, காபி கொட்டை, கிலோவுக்கு, 45 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம், பனம்பிள்ளி நகரில் உள்ள, 'கபே காபிலுவாக்' என்ற உணவு விடுதியில், ஆறு மாதங்களாக இந்த காபி விற்கப்படுகிறது. இங்கு தினமும், 10 பேர் காபி குடிக்க வருகின்றனர்.
— ஜோல்னாபையன்.

