PUBLISHED ON : ஜூலை 26, 2015

முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், பதவியில் இருந்த காலத்திலும், ஒரு சாதாரண குடிமகனாகவே வாழ்ந்தார். காலை நடைபயிற்சியின் போது, திருச்சூர் ரயில் நிலையம் அருகே பிளாட்பார்மில் நாளிதழ்கள் மற்றும் வாரப்பத்திரிகைகளை வாங்கிச் செல்வார்.
ஒருமுறை, தமிழரான ரயில்வே போலீஸ் அதிகாரி, இவரிடம் பிளாட்பாரம் டிக்கெட் கேட்டார். 'என்னிடம் டிக்கெட் இல்லயே...' என்றார் அச்சுதானந்தன். அவரை, முதல்வர் என்று அறியாத அதிகாரி, கட்டணம் பெற்றுக் கொண்டு தான் அனுப்பி வைத்தார்.
பின், சிறிது நேரத்தில் அவர் வீட்டுக்கு ஓடி வந்த அதிகாரி, 'அய்யா... நீங்கள் யார் என்று தெரியாமல் தவறு செய்து விட்டேன்...' என்றார். அதை கேட்டு சிரித்தபடி, 'நீங்க தவறு செய்யவில்லை; டிக்கெட் வாங்காதது என் தவறு தான்...' என்றார் அச்சுதானந்தன்.
இன்று, ஒரு கட்சி உறுப்பினர் மீது, போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியுமா... நம் அதிகாரிகளுக்கும் நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் தான் வருமா?
— ஜோல்னாபையன்.