PUBLISHED ON : அக் 12, 2014

அ நிறம் | அளவு
உலகில் உள்ள அணைக்கட்டுகளில் பாதி, சீனாவில் இருக்கின்றன. அணைக் கட்டுகள் கட்டுவதில் சீன நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. இன்று, எழுபது நாடுகளில், ௩௦௦ அணைக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை களின் கட்டுமானப் பணிகளை, சீன நிறுவனங்களே கவனித்து வருகின்றன. சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியில், ௧௯௩௪க்கு பின் கட்டப்பட்ட, ௨௪௫ அணைக்கட்டுகள், அந்தந்த நாடுகளுக்கு பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரேசிலின் பெல் மோண்டு, சீனாவின் ஜின்ஷா மற்றும் எத்தியோப்பியாவின் ஜிப் ஆகிய அணைக்கட்டுகளும் இப்பட்டியலில் இடம் பிடித்து உள்ளன.
— ஜோல்னாபையன்.
