PUBLISHED ON : ஏப் 04, 2021

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நொவாடா அருகே, மரண பள்ளத்தாக்கு என்ற இடம் உள்ளது. இந்த பகுதி, கடல் மட்டத்திலிருந்து, 190 அடி கீழே உள்ளது. இதனால், உலகிலேயே அதிக வெப்பமுள்ள பகுதிகளில் ஒன்றாக, இது கருதப்படுகிறது.
இங்கு, கோடை காலத்தில் அதிகபட்சமாக, 132 பாரன்ஹீட், அதாவது, 55 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். இந்த பகுதியில், மொத்தமே, 24 பேர் தான் வசிக்கின்றனர். அவர்களும், கோடை காலத்துக்கு வேறு பகுதிகளுக்குச் சென்று விடுவர்.
இதனால் தான், இப்பகுதி, மரண பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒரு சுற்றுலா மையத்தில், பிரமாண்டமான தெர்மா மீட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இது, அந்த பகுதியில் வெப்ப நிலை எவ்வளவு உள்ளது என்பதை காட்டும். வெப்பம் அதிகம் உள்ள காலங்களில், இந்த தெர்மா மீட்டர் முன் நின்று, புகைப்படம் எடுப்பதற்காக, உயிரைப் பணயம் வைத்து, ஏராளமானோர் செல்கின்றனர்.
'இது, ரொம்ப ஆபத்தான விளையாட்டு. வெப்பம் தாங்க முடியாமல், சுருண்டு விழுந்து, ஏராளமானோர் இறந்துள்ளனர்...' என, எச்சரிக்கின்றனர், அதிகாரிகள்.
— ஜோல்னாபையன்
