
உலகிலேயே, 'கொரோனா' வைரசால் அதிகம் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. தற்போது, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, முதல் கட்டமாக, 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் போடப்படுகிறது.
சமீபத்தில், புளோரிடா மாகாணத்துக்கு, தடுப்பூசி போடப்படும் முகாமுக்கு, வயதான பெண்கள் இருவர் வந்தனர்.
தடுப்பூசி போடும் சுகாதார பணியாளர், அந்த பெண்களின் நடவடிக்கைகளைப் பார்த்து, சந்தேகம் அடைந்து, அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
விசாரித்தபோது, அந்த இரு பெண்களும், முறையே, 34, 44 வயதுடையவர்கள் என்பதும், தடுப்பூசி போடுவதற்காக, தங்களை வயதான பெண்கள் போல், 'மேக் - அப்' போட்டு, வெள்ளை நிற, 'விக்' வைத்ததும், தெரிய வந்தது.
'இனி, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...' என்று, அவர்களை எச்சரித்து அனுப்பினர், அதிகாரிகள்.
— ஜோல்னாபையன்

