
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்ற பழமொழி, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. தற்போது இவர், பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன் இணைந்து, டிரிபிள் எக்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதனால், உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார், தீபிகா.
இந்த மகிழ்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அவருக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் நடந்துள்ளது. இதே படத்தில், பிரேசிலை சேர்ந்த, உலகப் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மரும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். இதனால், மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார், தீபிகா.
— ஜோல்னாபையன்.

