PUBLISHED ON : மார் 25, 2012

இருபது ஆண்டுகளுக்கு முன், தான் ஏழு மாத கர்ப்பினியாக இருந்த போது, வேனிட்டி பேர் என்ற பத்திரிகையின் அட்டைப் படத்துக்காக, நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஹாலிவுட் நடிகை டெமி மூர்.
அம்மணி நடித்து, கடந்தாண்டில் வெளிவந்த, 'மார்ஜின் கால்' என்ற ஹாலிவுட் படம் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் நடித்த, 'லால்' என்ற ஹாலிவுட் திரைப்படம், விரைவில் வெளிவர உள்ளது.
இத்தனை பரபரப்புக்கும், பிரபலத்துக்கும் சொந்தமான டெமிமூர், தான் அதிகம் குண்டாகிக் கொண்டு வருகிறோம் என்று ஐயப்பட்டு, பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்.
உணவின் மீது வெறுப்பும், அடிக்கடி தன் எடையைப் பரிசோதித்துக் கொள்ளும் எண்ணமும் அதிகரிக்க, அதற்காக மனநல மருத்துவரை அணுகியுள்ளார். 'அனரெக்சியா' எனும் மன அழுத்த நோயின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை கண்டறிந்த மருத்துவர், அவரை அனரெக்சியாவுக்கான சிறப்பு மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற அனுப்பியுள்ளார்.
வாய்க்கு ருசியாக சாப்பிட முடியாமல் தவிக்கிறார் டெமி!
— ஜோல்னா பையன்.
