தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பிளாஸ்டிக் தான் சாப்பாடு!

பிளாஸ்டிக் தான் சாப்பாடு!

பிளாஸ்டிக் தான் சாப்பாடு!


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இளம் பெண், கெய்லின். இவர் ஒரு வினோத பெண். எப்படி என்கிறீர்களா? கடந்த 11 ஆண்டுகளாக, பிளாஸ்டிக் தான் இவரது முழு நேரச் சாப்பாடு என்றால், இவர் ஒரு அதிசயப் பெண் தானே.

காலை, மாலை, இரவு, என மூன்று வேளையும், வெரைட்டியான பிளாஸ்டிக் பொருட்களை ஒரு பிடி, பிடித்து விட்டுத் தான், தூங்கச் செல்கிறார். வாட்டர் பாட்டிலில் இருந்து, 'சிடி'க்கள் வரை, இதுவரை, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு, ஏப்பம் விட்டுள்ளார்.

'டிவி' ரிமோட் கன்ட்ரோல், பாசி மணிகள், ஊக்குகள், பல் குத்தப் பயன்படும் பிளாஸ்டிக் குச்சிகள் என, ஒரு பிளாஸ்டிக் கடையே, இவரது வயிற்றுக்குள் போயுள்ளது. 'ஒரு வரைமுறையே இல்லாமல், பிளாஸ்டிக் பொருட்களை அரைத்து தள்ளுகிறீர்களே... உங்களுக்கு எதுவும் ஆகவில்லையா?' என, ஆச்சரியத்துடன் கேட்டபோது, 'கடந்த 11 ஆண்டாக ஒன்றும் ஆகவில்லை. இனிமேல் என்ன ஆகப் போகிறது...' என, கூறியபடியே, அருகில் இருந்த ஒரு, 'சிடி'யை, முறுக்கு சாப்பிடுவது போல், கடித்துச் சாப்பிட்டு, சப்புக் கொட்டினார்.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us