தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆசை, மனநிம்மதிக்கு கேடு!

ஆசை, மனநிம்மதிக்கு கேடு!

ஆசை, மனநிம்மதிக்கு கேடு!


PUBLISHED ON : ஆக 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலம் தான். இந்த குறுகிய வாழ்நாளில் எப்படி வாழ்ந்தால் நல்லது, எப்படி வாழ வேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. மனிதன் நேர்மையான வழியில் தேவையான அளவு சம்பாதித்து, குடும்பத்தையும் ஆதரித்து, தான, தர்மங்களையும் செய்து, இந்த வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க வேண்டும்.

முக்கியமாக, சாப்பாட்டுக்காக பிறரிடம் கை ஏந்தாதே என்பது. இரண்டாவது, நோய், நொடி இல்லாமல் வாழ்ந்து, கடைசி காலத்தில் எவ்வித சிரமமும் தனக்கும், பிறருக்கும் இல்லாமல் மரணமடைய வேண்டும் என்று பகவானை பிரார்த்திக்க சொல்லிஇருக்கிறது.

பொழுது விடிந்தால் இன்றைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கவலையே இருக்கக் கூடாது. நமக்கு என்று ஏதோ ஆகாரம் உள்ளது; அதை கொண்டு திருப்திப்பட வேண்டும்.

மனிதனுக்கு ஆசைகள், அபேட்சைகள் இருக்கலாம். ஒரு பொருள் கிடைத்தால் நல்லது என்று நினைப்பது அபேட்சை; நியாயமானது. ஒரு பொருளை அடைந்தே தீர வேண்டும் என்று நினைப்பது ஆசை. இப்படி ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டால், அதை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நியாயமான வழியில் கிடைக்காவிட்டால், அநியாயமான வழியில் அடைய ஆசைப்பட வேண்டியிருக்கும்.

நியாயமான வழி என்பது நிர்பயமானது; அநியாயமான வழி என்பது ஆபத்தும், பயமும் நிறைந்தது. அந்த வழியில் ஏன் போக வேண்டும்? 'ஏன் மன நிம்மதி இல்லாமல் வாழ வேண்டும். பகவான் இருக்கிறார்; அவர் எப்படியும் எனக்கு படி அளப்பார்...' என்ற உணர்வோடு, நேர்மையுடன் நடந்து, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

பகவானை வழிபட்டால் அவன் வழி காட்டாமல் இருக்க மாட்டான். இதை ஒழுங்காக செய்தாலே பகவான் நம் ஆசைகளை நிறைவேற்றி வைப்பானே... அது தெரியாமல் ஏன் அலைய வேண்டும்?

***

ஆன்மிக வினா-விடை!

ஆலயங்களுக்கு சென்றால், எந்தெந்த கடவுளை எத்தனை முறை வலம் வர வேண்டும்?

எந்த கடவுளானாலும், ஒரு முறைக்கு மேல் வலம் வர வேண்டும்.

***

வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us