/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
மானமாவது; மரியாதையாவது 'டப்பு' தான் இப்போ முக்கியம்!
/
மானமாவது; மரியாதையாவது 'டப்பு' தான் இப்போ முக்கியம்!
மானமாவது; மரியாதையாவது 'டப்பு' தான் இப்போ முக்கியம்!
மானமாவது; மரியாதையாவது 'டப்பு' தான் இப்போ முக்கியம்!
PUBLISHED ON : ஜன 12, 2014

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர், பிரபல பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர், மைக்கேல் நிக்கோல். இவருக்கு, 18 மற்றும் 21 வயதுகளில் இரு மகள்கள். இரண்டு பேரையும், மாடலிங் துறையில் பிரபலப்படுத்த வேண்டும் என்பது, இவரின் கனவு. அதனால், குழந்தை பருவத்திருந்தே, மூக்கு, காது, உதடு என, ஒவ்வொரு பாகத்தையும், அழகு படுத்துவதாக கூறி, பிளாஸ்டிக் சர்ஜரியில், புகுந்து விளையாடி விட்டார். இத்துடன், அவரின் கைவண்ணம் நின்றுவிடவில்லை. மகள்கள் இருவரும், சற்று வளர்ந்ததும், அவர்களின் மார்பகத்தை பெரிதாக்குவதற்கான சர்ஜரியை செய்தார். அவரின் இந்த செயல்கள், அமெரிக்காவில், கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அவரின் மகள்களோ, 'எங்கள் தந்தை, எங்களுக்காக தானே, சிரமப்படுகிறார். அவரை, எங்கள் தந்தையாக அடைவதற்கு, நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...' என, சாதாரணமாக கூறுகின்றனர். இன்றைய அவசர யுகத்தில், பணத்துக்கு தானே, முதல் மரியாதை!
— ஜோல்னா பையன்.