PUBLISHED ON : மார் 12, 2017

அ நிறம் | அளவு
குஜராத் மாநிலம், அகோதர கிராமத்தை உலகின், முதல் டிஜிட்டல் கிராமம் எனலாம். காரணம், மொபைல் போன் வழியாகவே, தங்கள் எல்லா தேவைகளையும் முடித்து விடுகின்றனர்.
கடையில், 10 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட, மொபைல் போன் மூலமாகவே பணம் செலுத்துகின்றனர். இக்கிராமத்தில் உள்ள, 1,500 பேரில், 1,200 பேருக்கு வங்கி கணக்கும், 'ஆன் லைன்' வசதியும் உண்டு.
இங்கு, ஒரே ஒரு, ஏ.டி.எம்., உண்டு. அதில், நிறைய பணம் இருந்தாலும், எடுக்க ஆட்கள் தான் இல்லை. மற்ற மாநிலங்கள், 'டிஜிட்டலுக்கு' மாறப் போவது எப்போது!
— ஜோல்னாபையன்.
