PUBLISHED ON : மார் 12, 2017

அ நிறம் | அளவு
அரசு ஊழியரான அப்துல்கலாம் என்பவர், 35 ஆண்டுகளுக்கு முன், 'ஜாதி, மத மற்றும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாத தன்னை, மணக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்...' என்று, பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார்.
திருவனந்தபுரம் கிளிமானூரை சேர்ந்த, கிருஷ்ணகுமாரி என்ற கல்லூரி மாணவி, இதைப்படித்து, அவரை தொடர்பு கொண்டார். இருவருக்கும் இடையே கடித பரிமாற்றம் நிகழ்ந்ததை தொடர்ந்து நேரில் சந்தித்து, தங்கள் எண்ணங்களையும் பரிமாறிக் கொண்டனர். பின், கிருஷ்ணகுமாரி வீட்டுக்கு பெண் கேட்டு சென்றார், அப்துல்கலாம். இவர்களது விருப்பத்தை அறிந்த குடும்பத்தினர், பெருந்தன்மையுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
இன்று, மத அடையாளங்களை துறந்து, மகன், மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர், இத்தம்பதியினர்.
— ஜோல்னாபையன்.
