PUBLISHED ON : மார் 12, 2017

அ நிறம் | அளவு
படத்தில் இருப்பவர், பிரபலமான, ராஜ் கமல் சர்க்கசின் உரிமையாளர், கமலா. கிழக்கு நேபாளம், தன்குடி என்ற ஊரை சேர்ந்த இவர், சிறு வயதில் பெற்றோரை இழந்ததால், நாடோடிகளுடன் இணைந்து, ஊர் சுற்ற துவங்கினார்.
தன், 13வது வயதில், 'எம்பயர் சர்க்கஸ்' கம்பெனியில் சேர்ந்து, சர்க்கஸ் வாழ்க்கையை தொடங்கினார். உடன் பணியாற்றிய போலன் என்ற மலையாளியை காதலித்து மணந்தார். இவர்களது மகன் ராஜ்குமார் பெயருடன், கமலாவின் பெயரும் சேர்த்து உருவானது தான், 'ராஜ் கமல் சர்க்கஸ்!'
இன்று கணவர் உயிருடன் இல்லாத நிலையில், தனியொரு பெண்ணாக சர்க்கஸ் கம்பெனியை நடத்தி வருகிறார், கமலா.
— ஜோல்னாபையன்.
