PUBLISHED ON : ஆக 02, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் படங்களை போலவே, ஸ்பைடர்மேன் படங்களுக்கும் கிராக்கி உண்டு. குறிப்பாக, ஸ்பைடர்மேன் படங்களுக்கு ஏராளமான குழந்தை ரசிகர்கள் உண்டு.
இதுவரை, டோபி மகியூர், ஆண்ட்ரூ கார்பீல்டு போன்றோர் ஸ்பைடர்மேனாக நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளனர். அடுத்த ஸ்பைடர்மேன் படத்தை, பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜான் வாட்சன் இயக்குகிறார். இதில், ஸ்பைடர்மேனாக நடிப்பதற்கு, டாம் ஹாலண்ட் என்ற, 19 வயது இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புது ஸ்பைடர்மேனுக்கு, ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது, 2017ல் படம் வெளியாகும் போது தான் தெரியும்.
— ஜோல்னாபையன்.