PUBLISHED ON : நவ 08, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுவாக, கோல்கட்டாவில் எந்த ஒரு பண்டிகையும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதிலும், தீபாவளியன்று நிகழும் காளி பூஜை மிகவும் புகழ்பெற்றது. அவர்களுக்கே உரித்தான, தனித்தன்மை வாய்ந்த அலங்காரமும், உடை வடிவமைப்பும், நம்மை, 'வாவ்' என்று சொல்ல வைக்கும்.
அன்றைய தினம், பூஜையில் கலந்து கொள்வதால், புது உற்சாகமும், அளவில்லா மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பூஜை முடித்த கையோடு, அங்குள்ள பார்க் தெரு மற்றும் புது மார்க்கெட் பகுதியில் கிடைக்கும் உணவுகளை, மக்கள் வாங்கி ரசித்து சுவைப்பர்.