PUBLISHED ON : நவ 08, 2020
ஒரு சமயம், நரகாசுரனை வதம் செய்வதற்காக, மகாவிஷ்ணு புறப்பட்டு சென்றபோது, அழகே வடிவான திருமகள் மட்டும் தனியாக, வைகுந்த மாளிகையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருக்கும் தேவியை கவர்ந்து செல்லும் பொருட்டு, யாருக்கும் தெரியாமல், அரக்க சேனைகளில் சிலர், மாளிகைக்குள் புகுந்தனர்.
இதை குறிப்பால் உணர்ந்த தேவி, அங்குமிங்கும் சென்று அலைக்கழித்தவள், வழிபாட்டு அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்குச் சுடருக்குள் புகுந்து, தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டாள்.
பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் போன்றது, தீபம். உணவு சமைப்பதற்கும் தேவைப்படும், அக்னி உருவாக்குவதற்கும் பயன்படுகிற தீப ஒளி, தீமைகளை கண்டால் எரிக்கும் சுடராகவும் புலப்படும் தீ.
ஆம்... அத்தனை வகையிலும் உட்பொருள் உணர்த்துகிற தீபத்திற்கு உள்ளே புகுந்து, பெண்களுக்கு பெருமை தேடித் தந்தாள், அந்த திருமகள். தீபத்திற்கு இலக்கணம் சொல்லப்பட்ட மங்கள நாள் தான், தீபாவளி!