PUBLISHED ON : நவ 08, 2020

* குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, அருகே ஒரு பெரியவராவது கட்டாயம் இருக்க வேண்டும்
* கார்கள், இரு சக்கர வாகனங்களை பத்திரமாக ஒதுக்குப்புறமான இடத்தில் தள்ளி நிறுத்திய பின், பட்டாசு வெடிக்க ஆரம்பிப்பது நல்லது
* தீபாவளி சமயத்தில், மாடி வீடு மற்றும் கீழே இருப்பவர்கள், எல்லா அறை ஜன்னல்களையும் மூடி வைப்பது நல்லது. எங்கிருந்தோ பறந்து வரும் ராக்கெட், வாணம், நம் வீட்டு ஜன்னல் வழியே சீறிப் பாய்ந்து, பேராபத்தை உண்டாக்கி விடும்
* பட்டாசுகளை வாங்கியவுடன், அவற்றை வெயிலில் காய வைத்து, அட்டை பெட்டியில் அடுக்கி, கம்பளியால் சுற்றி மர அலமாரியில் வைத்தால், நமத்து போகாது
* பண்டிகை நாட்களில் அக்கம் பக்கத்தார், உறவினர்களுக்கு இனிப்பு, பலகார வகைகளை கொடுத்து அனுப்பும்போது, ஒவ்வொரு பண்டத்தையும் தனி காகிதம் அல்லது 'பிளாஸ்டிக் கவர்'களில் போட்டு, ஒன்றோடு ஒன்று கலக்காமல் கொடுத்தனுப்பலாம்.