
* அதிரசம் செய்யும்போது, ஒரு கிலோ அரிசிக்கு, ஒரு கரண்டி உளுத்தம் பருப்பை வறுத்து சேர்த்து அரைத்து, வழக்கமான பாணியில் சுட்டு எடுத்தால், அதிரசம் பஞ்சு போல இருக்கும்
* அதிரசத்தை நல்லெண்ணெயில் சுட்டால், அதன் சுவை அதிகரிக்கும். அரிசி மாவில் அதிரசம் பண்ணுவது போல், சிறுதானிய மாவை கலந்தும் அதிரசம் செய்ய, சுவையோடு சத்தும் சேரும்
*மைதாவில் செய்யும் பாதுஷா போன்ற இனிப்புகளை எண்ணெயில் பொரித்தெடுத்து ஆறவிட்ட பிறகே, ஜீராவில் போட்டு எடுக்க வேண்டும்
*குலோப்ஜாமூன் செய்யும்போது சிறிது, 'ப்ரெஷ் கிரீம்' சேர்த்து பிசைந்து உருண்டைகள் செய்தால், மிருதுவாக இருக்கும்
* ரவா லட்டு செய்யும்போது, சிறிதளவு அவலை, மிக்சியில் ரவை போல பொடித்து நெய்யில் வறுத்து கலந்து செய்தால், சுவையாக இருக்கும்
* சர்க்கரை பாகு செய்ய, சர்க்கரையில் தண்ணீர் விட்டு அடுப்பில் அப்படியே வைக்கக் கூடாது. சர்க்கரையை நன்கு கரைத்து விட்டுதான் வைக்க வேண்டும்.

