sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பட்டாசு பாண்டி!

/

பட்டாசு பாண்டி!

பட்டாசு பாண்டி!

பட்டாசு பாண்டி!


PUBLISHED ON : அக் 23, 2022

Google News

PUBLISHED ON : அக் 23, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பத்த வெச்சா வெடிக்குமா, பாண்டியோட பட்டாசு சின்னம்?' என்ற, 'ஹேஷ் டாக்' தலைவர் பாண்டியையும், அவர், தனக்கு எழுப்பிக் கொள்ளும் பட்டாசு சின்னத்தையும் படுகேவலமாக ஏளனம் செய்து, 'டிரென்டிங்'கில் எகிறிக் கொண்டிருந்தது.

''டேய் கிஷ்டா, நான் சொன்னது போலவே ஆய்போச்சு பாருடா... ஜனங்க ஒத்துக்க மாட்டாங்க, கிண்டல், கேலியா பேசுவாங்கன்னு சொன்னேன். நீங்கள்ளாம் கேட்காம என்னை சதாய்ச்சி ஒத்துக்க வைச்சிட்டீங்க,'' என, தன் பிரதான சிஷ்யனான கிஷ்டனிடம் நொந்தபடி முறையிட்டார், பாண்டி.

''தலைவா... இது, உன் எதிரி எவனோ செஞ்ச குறும்பு போல கீது. அது இல்லாம, இப்போவெல்லாம் நல்லதோ, கெட்டதோ இப்படி கொளுத்தி போட்டு கும்மாளம் அடிக்கிறானுங்க.

''உன் நினைவு சின்னம், இந்த ஊர் பயலுங்களுக்கே தெரிய போவுதோ என்னவோன்னு, நீ பயந்தே... இப்போ ஒலகம் பூரா, 'டிரென்டிங்' ஆயி சுத்தினுக்கீது பாரு. நீ பேஜாராகாம இந்த எஸ்டிமேட்டை பாரு...''

எங்கே பாண்டி மீண்டும், 'ஜகா' வாங்கிவிட போகிறாரோ என்ற பயத்தில் பாண்டியின் நினைவு சின்ன, 'புராஜக்ட்' வேலையை விடாப்பிடியாக தொடருவதிலேயே கவனமாயிருந்தான், அந்த தொண்டன்.

எல்லாரையும் போல சொத்துக்களை சேர்க்க அரசியலில் குதிக்காமல், குவிந்திருந்த பரம்பரை சொத்துக்களை பறிகொடுக்க அரசியலுக்கு இழுக்கப்பட்டிருந்தார், பாண்டி. இவருடைய அப்பாவிதனம் மற்றும் அறியாமையை ஆதாயமாக்கி, ஏய்த்து ஏமாற்றிக் கொண்டிருந்தது, ஒரு கூட்டம்.

தேர்தல் தோறும் ஏதாவதொரு பிரதான கட்சியோடு கூட்டணியாக ஒட்டி, 'சீட்' வாங்கி போட்டியிடும் இவருடைய குணத்தில் கள்ளம், கபடு, சூது, வாது கூட்டணி சேராததால், தன் பாட்டனார் சொத்தில் பாதியை, கட்சி தலைவராக கரைத்துக் கொண்டிருந்தார்.

எங்கே இவர், கட்சியை கலைத்துவிட்டு தங்களை நட்டாற்றில் விட்டு விடுவாரோ என்று பயந்த அடிவருடி கும்பல், அவரை உற்சாகப்படுத்தி, உப்புசப்பில்லாத பிரச்னைகளுக்கு போராடுவது, உண்ணாவிரமிருப்பது என, சொத்தை தின்றுக் கொண்டிருந்தது.

இப்போதும் அது போலவே, அவருக்கு நினைவு சின்னம் வைக்க துடித்துக் கொண்டிருந்தது.

உண்மையிலேயே தன் தகுதியை உணர்ந்தவராய், 'எனக்கெதுக்குடா நினைவு சின்னம், நான் என்ன பெரிய தியாகியா?' என்று, பிடி கொடுக்காமலேயே நழுவிக் கொண்டிருந்தார், பாண்டி.

ஒருசமயம், கட்சி ஆபிசில் இவர் பார்த்துக் கொண்டிருந்த, 'டிவி'யில், பாரத பிரதமர், இந்திய சின்னத்தை திறந்து வைத்துக் கொண்டிருந்தார்.

'டேய் கிஷ்டா, இது என்னடா பிரதமர் தொறந்து வைக்கறாரு?' தன் அறியாமையை வெளிப்படுத்தி கேட்டார், பாண்டி.

'தலைவா, பள்ளி பாடத்தில மரம் நட்டாரு, ரோடு போட்டாரு என்றெல்லாம் நாலாங் கிளாஸிலே அசோகரைப் பத்தி படிச்சிருப்பியே... இது, அவரோட சின்னம்... நாட்டோட சின்னமா கீது...

'சின்னம் வேணாம் வேணாம்ன்னு சொன்னியே, இப்ப பாத்தியா அத்தினி பெரிய சக்ரவர்த்தி... அவரோட சின்னம்ன்னு ஒண்ணு இல்லேன்னா ஜனங்களுக்கு எப்படி அவரோட நினைவு வரும்?'

இதனால், மெல்ல மெல்ல பாண்டிக்கும், தனக்கு ஒரு நினைவு சின்னம் வைத்துக் கொள்ள ஆசை துளிர்விட துவங்கியது.

'சரிங்கடா, ஏதோ ஆசைப்பட்டு கேக்கறீங்களேன்னு அரைகுறை மனசோட ஒத்துக்கறேன்...' என்றவர், 'அப்பிடி என்ன சின்னம்டா எனக்கு வைக்கப் போறீங்க?' என்று ஆவலோடு கேட்டார்.

'தலைவா, ஒத்துகினே இல்ல... உனக்கேத்த சின்னத்தை தேர்ந்தெடுக்கிறோம்...' என்று, கட்சியை கூட்டினர். செயற்குழு அப்படி என்ன சின்னத்தை தேர்வு செய்ய போகிறதென்ற ஆவலோடு, அவர்கள் செய்த அலப்பறைகளை கேட்டுக் கொண்டிருந்தார், பாண்டி.

இது பொறுக்காமல், சீக்கிரம் முடிக்கச் சொல்லி சிக்னல் கொடுப்பதுபோல், சரம் சரமாக பட்டாசுகளை வெடிக்கத் துவங்கியிருந்தனர், அடிமட்ட தொண்டர்கள்.

ஆட்களை அனுப்பி வெடிப்பதை நிறுத்தச் சொல்லியும், தொண்டர்கள் நிறுத்தாததால், மிகவும் கடுப்பாகி விருட்டென்று எழுந்து, அவர்களை கண்டிக்க வெளியே சென்றார், பாண்டி.

இவர் எப்போதடா வருவார் என்று காத்திருந்த, 'மீடியா'வினரின், 'மைக்'குகள், பாண்டியை மொய்த்துக் கொண்டன.

'என்ன சின்னம் சார் வைச்சுக்க போறீங்க?' என்று, அவர்கள் கேட்டது எதுவும் இவர் காதில் விழவில்லை.

'ஒண்ணும், 'டிசைட்' ஆகல...' என்று, இவர் சொன்னதும், நிருபர்கள் காதில் விழாமல், வெடி சத்தம் காதை பிளந்து கொண்டிருந்தது.

'என்ன சொல்றீங்க?' என்று, அவர்கள் மறுபடியும் சைகையில் கேட்க, இவரும் பட்டாசு வெடிக்கும் திசையை காட்டி சைகை செய்தது, பிசகாக முடிந்தது.

'ஓஹோ... பட்டாசா?' என்று, அவர்கள் தவறாக முடிவு செய்து, 'பட்டாசுன்னா எத்தனை அடி சார்... திரி உண்டா?' என்றெல்லாம் உப கேள்விகளை கேட்டனர்.

எதுவும் அவர் காதில் விழவிடாமல், பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தது. உள்ளேயிருந்து அடித்து பிடித்து வந்த கிஷ்டனும், சகாக்களும், பாண்டியை தடுத்தாட் கொண்டு, தர தரவென்று இழுத்துப் போய் காரில் ஏற்றி அனுப்பினர்.

இப்படி நிருபர்களால் நிமிடத்தில் முடிவு செய்யப்பட்ட சின்னம், அடுத்த நிமிடமே, 'பிரேக்கிங் நியூஸ்' ஆகி, அனைத்து, 'டிவி'யிலும், 'பிளாஷ்' ஆனதை அறியாமல், பாண்டி காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தார்.

'என்னாங்க... உங்களுக்கும், பட்டாசுக்கும் என்ன சம்பந்தம்ன்னு, இந்த சின்னத்துக்கு ஒத்துக்கிட்டு வர்றீங்க?' என்று, 'ஷாக்கிங்' வரவேற்பு தந்தாள், அவர் மனைவி கனகா.

பாண்டிக்கு என்ன நடந்திருக்குமென ஓரளவு யூகிக்க முடிந்திருந்தது.

அவர் மனைவி கேட்டது போல், அடுத்தடுத்து அத்தனை, தொலைபேசி அழைப்புகளும், 'இவருக்கும், பட்டாசுக்கும் என்ன சம்பந்தம்...' என்று கேட்டு தொல்லை பண்ண துவங்கின.

தொல்லையை தாங்காமல் தொலைபேசி தொடர்பை துண்டித்து உட்கார்ந்திருந்தார், பாண்டி.

ஆபத்பாந்தவர்களாக கிஷ்டனுடன், பஞ்ச பாண்டவர்களாக உயர்மட்ட தொண்டர்களும் உதவிக்கு வந்தனர். சின்னமே கிடைக்காமல் திணறி கொண்டிருந்தவர்களுக்கு இப்படி எவனோ முடிவு செய்திருந்த பட்டாசை, எப்படி பரிந்துரைக்கலாமென்று முடியை பிய்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

'என்ன தலைவா, உனக்கே உன் பேர்லே பட்டாசு எப்பிடி ஒட்டிகினுகீதுன்னு தெரியலீன்றே... உன்னோட தாத்தா, அப்பா யாராவது பட்டாசு வியாபாரம் பண்ணாங்களா... இல்ல, நீ தீபாளியன்னிக்கு பொறந்தியா... இல்ல, நீ வாலிபத்திலே பட்டாசு மாதிரி படபடன்னு சுறுசுறுப்பா இருப்பியா...' என்று, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், பட்டாசு பாண்டியிடம் பதில் இல்லை.

இந்நிலையில் தான், தற்போது, அரசியல் வட்டாரங்கள், நக்கல் செய்ய துவங்கின. அனைத்து, 'டிவி' அரட்டைகளுக்கும், இந்த பட்டாசு விவகாரம் செம தீனி போட்டுக் கொண்டிருந்தது.

நாளிதழ்கள், முகநுால் என, பக்கம் பக்கமாக பாண்டியின் முகமும் பட்டாசின் பரிகாசமும் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது. மனைவி கனகாவிடம் இப்படி ஆகிவிட்டதைப் பற்றி நொந்து பேசிக் கொண்டிருந்தார், பாண்டி.

அப்போது, கனகாவின் மொபைல் போன் ஒலித்தது.

''ஏங்க, ஊர்லேர்ந்து உங்க பாட்டி பேசுது. என்ன அவசரமோ தெரியல... 'ஸ்பீக்கர்'ல போடறேன்,'' -என்று போட்டு விட்டாள்.

''ஏன்டி கனகா, நீயாவது உன் புருஷனுக்கு புத்தி சொல்ல வேணாம்... ஊர் பூரா கேலியும், கிண்டலுமா பேசறானுங்களே... சரி, பட்டாசுக்கும், இவனுக்கும் என்ன சம்பந்தம்?

''என் வூட்டுகாரர் பேரு பட்டாபி. அவரை எல்லாரும், பட்டா, பட்டான்னு செல்லமா கூப்பிடுவாங்க. என் புள்ளை பேரு, அதான் உன் மாமனார் பேரு சுப்புராசு. பாண்டியை பள்ளிகூடம் சேர்க்க, அவன் தாத்தாதான் கூட்டிட்டு போனாரு.

''இவன் பேரை, சு.பாண்டின்னு முதல்ல பதிவு செஞ்சவருக்கு, தன்னோட பேரும் பள்ளிக்கூடத்தில இருக்கட்டும்ன்னு, ஆசை வந்திச்சாம். அதனால, பட்டா.சு.பாண்டின்னு, இவர் பேரையும் சேர்த்து பதிவு செஞ்சுட்டு வந்து, எங்கிட்டே வெக்கப்பட்டுக்கிட்டே சொன்னாரு.

''அது இப்போ, இப்படி ஒரு வெட்கக்கேடா போகும்ன்னு நெனக்கலே. இனிமேலாவது அவனை அரசியல் கிரசியல்ன்னு செலவு பண்ணிட்டு திரியாம உருப்படற வழியை பார்க்கச் சொல்லு,'' என்றாள், கிழவி.

அதை அசடு வழிய கேட்டு உட்கார்ந்திருந்த பாண்டியை, இனிமேல் கண்டித்து திருத்தியே ஆகவேண்டுமென்று கங்கணம் கட்டினாள், கனகா.

அரசியலிலிருந்து பாண்டி விலகப் போவதாக அறிக்கை விட்டாள். வழக்கம் போல் வரிந்து கட்டி, 'மீடியா'வினர் பேட்டி காண ஓடி வந்தனர்.

''என் கணவர், ஒரு அப்பாவி. அவருக்கு அரசியல் லாயக்கே படலே. அதனால, விலகிடணும்ன்னு ரொம்ப நாளா நெனைச்சார். அரசியலிலிருந்து விலகினா என்ன பண்றதுன்னு யோசனை பண்ணிட்டிருந்தோம்.

''இவரோட தாத்தா, சிங்கப்பூர்லே பட்டாசு வியாபாரம் பண்ணினவரு. அதனால அவரை, பட்டாசு பட்டாபின்னு கூப்பிடுவாங்களாம். அப்புறம் அதுவே இவங்க குடும்ப பேரா சேர்ந்துகிச்சி. அந்த பாட்டனார் பண்ணின தொழிலையே துவங்கலாம்ன்னு இவரு நினைச்சாரு.

''தொழில் துவங்கறதுக்கு முன்ன, அதுக்கு ஒரு விளம்பரம் இருந்தா நல்லதுன்னு நெனைச்சார். இவரும், இவரோட தொண்டர்களும், 'நினைவு சின்னம் பட்டாசு'ன்னு ஒரு நாடகம் நடத்தினாங்க. அது நாங்க செய்யப் போற பாண்டி மார்க் பட்டாசு பிசினசுக்கு நல்ல, 'டிரென்டிங்'கா விளம்பரமா ஆகிபோச்சி.

''மீடியாக்காரர்களான நீங்கள், இதுக்கு ரொம்பவே உதவி பண்ணிட்டீங்க. ரொம்ப நன்றி! நீங்க எல்லாரும், இந்த தீபாவளிக்கு பாண்டி மார்க் பட்டாசையே வாங்கணும்ன்னு கேட்டுகறேன்...'' என்று, கனகா கூறியதும், கடுப்பாகிய, மீடியாக்காரர்கள், இடத்தை காலி செய்தனர்.

எது எப்படியோ, பத்த வெச்சா வெடிக்குமா என்று, பரிகாசம் செய்யப்பட்ட பட்டாசு சின்னம், பாண்டி துவங்கியிருக்கும், 'பாண்டி மார்க் பட்டாசு' மார்க்கெட்டை பிரகாசமாக வெடிக்கச் செய்து விட்டது.

அகிலா கார்த்திகேயன்






      Dinamalar
      Follow us