தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தீபாவளி ஸ்வீட்ஸ்!

தீபாவளி ஸ்வீட்ஸ்!

தீபாவளி ஸ்வீட்ஸ்!


PUBLISHED ON : நவ 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜ் போக்

தேவையான பொருட்கள்: இரண்டரை லிட்டர் பாலில் எலுமிச்சை சாறு பிழிந்து, தயாரித்த பனீர், சர்க்கரை - 2 கிலோ, தண்ணீர் - 10 கப், பால் - 1 ஸ்பூன், குங்குமப்பூ, முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய் தேவையான அளவு.

செய்முறை: பாதியளவு குங்குமப்பூவில் சிறிது பால் விட்டு கரைத்து, பனீருடன் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கரகரப்பாக பொடித்த, 'நட்ஸ்' வகை மற்றும் ஏலக்காய் பொடியுடன், மீதமுள்ள குங்குமப்பூ பால் ஊற்றி பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, பனீர் உருண்டைகளுக்குள் அடைக்கவும்.

சர்க்கரை பாகு தயார் செய்து, தயாரித்த ராஜ் போக் உருண்டைகளை போட்டு, அதன் அளவு இரு மடங்கு ஆகும் வரை கொதிக்க விடவும். ராஜ் போக் உருண்டைகள், பாகில் நான்கு மணி நேரம் ஊறிய பின், பரிமாறவும்.

மால் புவா

தேவையான பொருட்கள்: பால் - 2 லிட்டர், சுண்ட காய்ச்சவும். மைதா - அரை கப், சர்க்கரை - கால் கிலோ, நெய் மற்றும் எண்ணெய் - பொரிக்க, ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ சிறிதளவு.

செய்முறை: சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அழுக்கு நீக்கிய பின், பிசுக்கு பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

சுண்ட காய்ச்சிய பாலுடன், மைதா மாவை கட்டி இல்லாமல் கெட்டியாக தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

தோசை கல்லில் சிறிது நெய் ஊற்றி, ஒரு கரண்டி மாவை ஊற்றி, இரு பக்கமும் சிவந்து, வெந்தவுடன், சூடாக உள்ள சர்க்கரை பாகில் மூழ்க விடவும்.

ஆறிய பின், பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ துாவி அலங்கரித்து பரிமாறவும்.

காலா கண்ட்

தேவையான பொருட்கள்:பாலில் எலுமிச்சை சாறு பிழிந்து தயாரித்த பனீர் - 1 கப், சுண்ட காய்ச்சிய பால் - 2 கப், சர்க்கரை - 1 கப், அலங்கரிக்க பிஸ்தா.

செய்முறை: சுண்ட காய்ச்சிய பாலுடன், பனீரை கலந்து, கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் வைத்து, அடி பிடிக்காமல் கிளறவும்.

சுருண்டு வரும்போது சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி, பாதாம் துாவி பரிமாறவும்.

பேசன் லாடு!

தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப், வெண்ணெய் - அரை கப், பாதாம் பருப்பு, ஏலக்காய் துாள், சிறிது உப்பு மற்றும் நெய் தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு, பாதாம் பருப்பை வறுத்து வைக்கவும். கனமான பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, ஏலக்காய் துாள் சேர்க்கவும். பின், கடலை மாவு, பொடித்த சர்க்கரை, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

சற்று ஆறிய பின், கையில் நெய் தடவி, மாவு கலவையை நன்றாக பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, நெய்யில் வறுத்த பாதாமை வைத்து பரிமாறவும்.

கேரட் - தேங்காய் பர்பி!

தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல், கேரட் துருவல் - தலா ஒரு கப், சர்க்கரை - 2 கப், பால் - 0.5 லிட்டர், ஏலக்காய் துாள் மற்றும் நெய் தேவையான அளவு.

செய்முறை: சுண்டக் காய்ச்சிய பாலுடன், தேங்காய் - கேரட் துருவல் சேர்த்து வேக விடவும். பின், அதை மிக்சியில் அரைக்கவும்.

கனமான வாணலியில் தண்ணீர் விட்டு சர்க்கரை பாகு காய்ச்சவும். இதில், தேங்காய் - கேரட் விழுது, ஏலக்காய் சேர்த்து கிளறவும்.

பின்னர், நெய் விட்டு சுருள கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் பரப்பி, ஆறியதும் துண்டுகளாக்கவும்.

செவன் கப் கேக்!

தேவையான பொருட்கள்: கடலை மாவு, தேங்காய் துருவல், பால் மற்றும் நெய் - தலா ஒரு கப், சர்க்கரை - 3 கப்.

செய்முறை: கனமான பாத்திரத்தில், கடலை மாவு, தேங்காய் துருவல், பால், சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றை ஒரு சேர கலக்கவும். அடுப்பில் வைத்து, அடி பிடிக்காமல் கிளறி நன்கு வெந்ததும், ஒட்டாமல் சுருண்டு வரும்போது, இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் கொட்டி, விரும்பிய வடிவில் வெட்டி பரிமாறவும்.

டிப்ஸ்!

* எண்ணெயில் பொரிக்கும் இனிப்புகளில், எண்ணெயுடன் சிறிது நெய் சேர்த்து பொரித்தால், நெய் வாசனையுடன் இனிப்பின் சுவையும் துாக்கலாக இருக்கும்

* இளஞ்சூட்டுடன் உள்ள சர்க்கரை பாகில், சிறிது ரோஸ் எசன்ஸ் சேர்த்து, பொரித்த குலோப்ஜாமூன்களை போட்டால், மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us