தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தீபாவளி பட்சண டிப்ஸ்!

தீபாவளி பட்சண டிப்ஸ்!

தீபாவளி பட்சண டிப்ஸ்!


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* லட்டு பிடிக்கும் போது முந்திரிப் பருப்பு திராட்சை, கல்கண்டு போடாமல், அதற்கு பதிலாக வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மற்றும் டூட்டி புருட்டி சேர்த்துப் பிடித்தால் மாறுதலான சுவையுடன் பார்க்க அழகாகவும் இருக்கும்

* தேன்குழல் செய்வதற்கு அரிசியையும், உளுத்தம் பருப்பையும், 4:1 என்ற விகிதத்தில் கலந்து ஒரு தேக்கரண்டி சீரகத்தையும் சேர்த்து, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். சல்லடையால் சலித்து விட்டு செய்தால், நன்றாக வெந்து, 'மொறுமொறு' என்று இருக்கும். தேன்குழல் மாவை கரைத்து, மெல்லிய தோசையும் வார்க்கலாம்.

ஒரு கப் குலோப் ஜாமூன் மிக்ஸ் மாவு எடுத்து, அதே அளவு பாலில் சிறிதளவு கேசரி பவுடர் கலந்து, கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். இத்துடன், இரண்டு பங்கு சர்க்கரை, மூன்று பங்கு நெய் என்ற விகிதத்தில் சேர்த்து கிளறி, இறுதியில், முந்திரியை நெய்யில் வறுத்து கொட்டினால், 'சூப்பர் அல்வா' தயார்

* கடலைப் பருப்பை ஊற வைத்து, போளி செய்ய நேரமில்லையா... கவலை வேண்டாம்! கடலை மாவை லேசாக நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். வாணலியில், வெந்நீரில் வெல்லம் கரைந்ததும், வடிகட்டி அதில், வறுத்த கடலைமாவை கொட்டி கிளறி வெந்ததும், ஆற வைக்கவும். பின், உருண்டைகளாக உருட்டி, எப்போதும் போல் போளி செய்யவும். ஊற வைத்து அரைக்கும் வேலையும், நேரமும் மிச்சம். நல்ல ருசியுள்ள போளியும் தயார்

* தேங்காய் பர்பி செய்யும்போது, கலவையில் ராகி மால்ட் இரண்டு தேக்கரண்டி சேர்த்தால், 'கமகம'வென்று சூப்பர் சுவையாய் இருக்கும்

* தீபாவளி பண்டிகைக்கு வித்தியாசமான ஆனால், சுவையான ஜவ்வரிசி காராபூந்தி செய்து பாருங்களேன். ஜவ்வரிசியை, எண்ணெயிலிட்டு பொரித்து எடுக்கவும். இத்துடன், சிறிது மிளகாய் துாள், பெருங்காயத்துாள், தேவையான உப்பு, மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சூப்பர் சுவையுடன் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us