தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ரோபாட் டான்ஸ் தெரியுமா?

ரோபாட் டான்ஸ் தெரியுமா?

ரோபாட் டான்ஸ் தெரியுமா?


PUBLISHED ON : அக் 14, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜப்பானின், கபுச்சிகோ என்ற நகரத்தில் உள்ள, ஒரு இரவு நேர உணவு விடுதியில், வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக, ரோபாட்டுகளை டான்ஸ் ஆட வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண் வேடமிட்ட, இரண்டு பிரமாண்ட ரோபாட்டுகள், இதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. பெண்கள் அணியும், உடைகள், இந்த ரோபாட்டுகளுக்கு அணிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை இயக்குவதற்கு, இளம் பெண்கள் சிலர், பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இரவு விடுதிகளில் நடனமாடும் பெண்களை போலவே, இந்த ரோபாட்டுகளை, நடனமாட வைக்கப் போகின்றனராம். இதை விளம்பரப்படுத்துவதற்காக, அந்த ஓட்டல் நிர்வாகம், சமீபத்தில், அந்த இரண்டு ரோபாட்டுகளையும், ஒரு வாகனத்தில் வைத்து, கபுச்சிகோ சாலையில், வலம் வந்தது. ரோபாட்டு களின், கலக்கலான நடனத்தை ரசித்தபடியே, உணவு சாப்பிடு வதற்கு, ஒரு நபருக்கு, 2,000 ரூபாய், கட்டணம் வசூலிக்கவுள்ளனர்.

பணம் சம்பாதிப்பதற்காக, தொழில் அதிபர்கள், எப்படியெல்லாம், யோசிக் கின்றனர் என்பதை, பார்த்தால், ஆச்சரியமாக இருக்கிறது.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us