PUBLISHED ON : ஜூலை 31, 2016

அ நிறம் | அளவு
நம் ஊரில், கிளி ஜோசியம் சொல்லி, பிழைப்பு நடத்துவோரை பார்த்துள்ளோம். ஆனால், உ.பி., மாநிலத்தில், வாரணாசி நகரில், பாம்புகளை வைத்து, ஜோசியம் சொல்கின்றனர். காவி உடை அணிந்து, நெற்றியில் விபூதியும், குங்குமப் பொட்டும் வைத்துள்ள சாமியார்கள் தான், இந்த பாம்பு ஜோசியர்கள். வருங்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புவோர், சாமியார் முன் உட்கார்ந்தவுடன், சில அசைவுகளில், உஷாராகி விடுகிறது பாம்பு. பின், அடுக்கி வைத்த சீட்டுகளில் ஒன்றை தொடுகிறது. உடனே, அச்சீட்டை பிரித்துப் படித்து, ஜோசியம் கூறுகிறார், சாமியார்.
- ஜோல்னாபையன்.
