PUBLISHED ON : ஜூலை 31, 2016

அ நிறம் | அளவு
இந்த கூந்தல் அழகரின் பெயர், பன்னியன் ரவீந்திரன். கேரள முன்னாள் எம்.பி.,யும், வலது கம்யூ., கட்சி தலைவர்களில் ஒருவருமான இவருடைய நீளமான கூந்தல் பார்லிமென்டில் பிரசித்தம். பார்லிமென்டில் இவர் நுழைந்தாலே, சக எம்.பி.,க்கள் சிரிப்பர். முன்னாள் பிரதமர் இந்திரா அவசர நிலை அறிவித்த போது, போலீசார், இளைஞர்களை வேட்டையாட துவங்கினர். அன்று, 'ஹிப்பி' ஸ்டைல் முடியுடன் இருந்த ரவீந்திரனைக் கண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர், முடியை வெட்டும்படி கட்டளையிட்டார்; 'முடியாது...' என்று மறுத்துள்ளார். அதன்பின், பிரபல அரசியல்வாதி ஆன போதும், அதே நீள முடியுடன் உலா வருகிறார், ரவீந்திரன். பீடி தொழிலாளியாக இருந்த இவர், இன்று பெரிய தலைவராக ஆகிவிட்ட போதும், அதே ஏழ்மை நிலையில் தான் உள்ளார்.
— ஜோல்னாபையன்.
