தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முடமானாலும் கணவன்!

முடமானாலும் கணவன்!

முடமானாலும் கணவன்!


PUBLISHED ON : ஜூலை 31, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவின் அன்காங் நகரத்தை சேர்ந்தவர் சூ ஜி கன்; இவரது கணவர் பெயர், ஜி ஜிபிங். இத்தம்பதியின் மகிழ்ச்சியான இல்லற வாழ்வு, 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தால் சீர்குலைத்து போனது. விபத்தில், படுகாயம் அடைந்து, எழுந்து நடமாட முடியாமல், படுத்த படுக்கையாகி, முடங்கி விட்டார், ஜி ஜிபிங்.

காலங்கள் உருண்டோடின; ஜி ஜிபிங்கின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், தன்னால், மனைவியின் வாழ்க்கை பாழாகி விடக் கூடாது என நினைத்து, வேறு திருமணம் செய்யும்படி, மனைவியை வற்புறுத்தினார்.

முதலில், இதை ஏற்காத சூ ஜி கன், கணவரின் வற்புறுத்தல் காரணமாக, சட்டப்படி அவரை, விவாகரத்து செய்து, திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணம் முடிந்ததும், மாஜி கணவரை அம்போ என விட்டுவிட்டு, புதிய கணவருடன் ஓடிப் போகவில்லை சூ ஜி கன். முதல் கணவரை, தன் வீட்டிலேயே வைத்து, பராமரித்து வருகிறார். புதிய கணவரும், அவருக்கு பக்க பலமாக இருந்து பணிவிடை செய்கிறார்.

மனிதநேயமிக்க பாசக்கார மனைவியையும், அவரது புதிய கணவரையும் பார்த்து, ஆச்சரியப்படுகின்றனர், சீன மக்கள்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us