PUBLISHED ON : மார் 06, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இயர் போன் கருவியை, காதுடன் நெருக்கமாக பயன் படுத்தக் கூடாது.
* தான் பயன்படுத்தியதை, மற்றவருடன் பகிரக் கூடாது; அதனால், பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
* இயர் போனை தொடர்ந்து பயன்படுத்தாமல், ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முதல், 10 நிமிடம் இடைவெளி விட வேண்டும்.
* சத்தம் அதிகமாக வைத்து கேட்பதை தவிர்க்கவும். 85 டெசிபலுக்கு மேல் தொடர்ந்து, 15 நிமிடம் பயன்படுத்தினால், கேட்கும் தன்மையை இழக்க நேரிடும்.
* காதில் மாட்டும் போது, வெளிக்காற்று உள்செல்லும்படி ஒருபுறமாக சாய்த்து, பயன்படுத்த வேண்டும்.
நவீன தொழில்நுட்ப கருவி எதை பயன்படுத்தினாலும், அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கக் கூடாது.

