
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோழி பண்ணை, ஆட்டு பண்ணை, மாட்டு பண்ணை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கழுதை பண்ணை கேள்விப்பட்டிருக்கிறீர்களா...
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருக்கிறது, ராமமங்கலம். இங்குள்ள எபி பேபி என்பவர், ஆயிரம் கழுதைகள் உள்ள பண்ணை ஒன்றை துவங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
கழுதைகளை, புத்தி கெட்ட மனிதர்களுடன் ஒப்பிட்டு, கேலி செய்வது வழக்கம்.
கழுதைகளை ஏன் பராமரிக்கிறார் இவர்?
'ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை, 4,800 ரூபாய். மருத்துவ குணம் கொண்ட கழுதை பாலில் மற்ற பாலில் இல்லாத அளவுக்கு சத்து இருக்கிறது. மக்னீசியம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இந்த பாலில் இருக்கிறது. ஒரு கழுதையிடமிருந்து, அதிகபட்சம், 50 மி.லி., பால் கிடைக்கும்...' என்கிறார், எபி.
ஜோல்னாபையன்

