PUBLISHED ON : அக் 30, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய், பூனைகள் போல எருமைகளை, செல்ல பிராணியாக வளர்க்க முடியுமா, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து மடியில் படுத்து உறங்குமா?
முடியும் என, நிரூபித்து இருக்கிறது, சங்கரன் என்ற, 14 மாத எருமைக்கடா.
கேரள மாநிலம், ஆலப்புழா, புதனம்பலம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனர் மகன் உன்னி கிருஷ்ணன், 10ம் வகுப்பு படித்து வருகிறான். எருமை குட்டியை வாங்கி வந்து மகனிடம் கொடுத்து வளர்க்க சொன்னார், ஆட்டோ ஓட்டுனர். மகனும், பாசமாக அதை வளர்த்து வருகிறான்.
இப்போது கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து, மடியில் தலை வைத்து துாங்குகிறது. இந்த அபூர்வ எருமை குட்டியை ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர்.
— ஜோல்னாபையன்