PUBLISHED ON : ஏப் 27, 2014

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள ஏழைக் குடும்பத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு, சிவ்ராம், சிவானந்த் என்ற, ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு, தலை, கை, இதயம் ஆகியவை தனித் தனியே இருந்தாலும், வயிறு மட்டும், ஒன்று தான் உள்ளது. இதனால், 'இவர்களை அறுவை சிகிச்சை செய்து பிரிப்பது, அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்...' என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இரட்டையரில் ஒருவர், அமர்ந்த நிலையில் இருந்தால், மற்றொருவர், படுத்த நிலையில் தான் இருக்க வேண்டும். குளிப்பது, உடை மாற்றுவது போன்ற வேலைகளை செய்வதற்கு, இருவரும் சிரமப்படுகின்றனர். 'எங்களை பிரித்து விடாதீர்கள். எவ்வளவு காலம் உயிர் வாழ முடியுமோ, அவ்வளவு காலமும், ஒன்றாகவே இருந்து விடுகிறோம்...' என, உருக்கமாக தெரிவிக்கின்றனர், இந்த சிறுவர்கள். 'மற்றவர்களுக்கு, காட்சி பொருளாக, அவர்கள் படும் வேதனை, எனக்கு மட்டும் தான் தெரியும்...' என, கண்ணீர் வடிக்கிறார், அவர்களது தந்தை.
— ஜோல்னாபையன்.
