PUBLISHED ON : ஏப் 27, 2014

இன்றைய இளம் பெண்களிடம், 'போல்கா டாட்ஸ்' என்ற உடை, மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளிலும், இந்த உடை தான், தற்போது, இளம் பெண்களின் பேஷனாக உள்ளது. வெள்ளை நிற புள்ளி வைக்கப்பட்ட, முழங்காலுக்கு சற்று கீழ் வரை மறைக்கும் வகையிலான உடைக்கு தான், 'போல்கா டாட்ஸ்' என, பெயரிட்டுள்ளனர். சமீபத்தில், பிரபல நடிகை இலியானா, மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு, அடர் நீல நிற உடையில், வெள்ளை நிற புள்ளி வைக்கப்பட்ட, 'போல்கா டாட்ஸ்' உடையுடன் வந்திருந்தார். விழாவுக்கு வந்திருந்த அனைவரின் கண்களும், இலியானாவையும், அவர் அணிந்திருந்த உடையையும் தான், மொய்த்தன. அங்கு வந்திருந்த புகைப்படக்காரர்கள், 'போல்கா டாட்ஸ்' உடையுடன் போஸ் கொடுக்கும்படி, அவரை நச்சரிக்கவே, இலியானாவும், அசத்தலாக, ஒரு, 'கேட்வாக்' நடத்தி, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
— ஜோல்னாபையன்.
