PUBLISHED ON : செப் 30, 2012

இந்த படத்தில் இருப்பவர், வியட்நாமைச் சேர்ந்த நுகுவேன் வான் சியேன். இவருக்கு, 85 வயதாகிறது. இவரது தலைமுடியின் நீளம், நான்கு மீட்டர். இதன் எடை மட்டும், இரண்டு கிலோ. பிரமாண்டமான டிராகன் போல் தோற்றமளிக்கிறது, இவரது தலைமுடி. குழந்தை பருவத்தில் இருந்தே, நீளமான தலைமுடி வளர்க்க வேண்டும் என்பது, இவரது ஆசை. இதனால், கடந்த, 70 ஆண்டுகளாக, தலைமுடியை வளர்த்து வருகிறார். இடையில் ஒருமுறை, முடியை வெட்டியபோது, விசித்திரமான நோய், இவரை தாக்கியதாம். இதனால், அன்றிலிருந்து தலைமுடியை வெட்டுவதை நிறுத்தி விட்டார். குளித்தபின், தலையை உலர வைப்பது, பெரிய வேலையாக இருப்பதால், கடந்த 30 ஆண்டுகளாக, தலைக்கு குளிப்பதையும் நிறுத்தி விட்டார். அவ்வப்போது, முடிக்கு எண்ணெய் தேய்ப்பதோடு சரி. 'இவ்வளவு நீளமான தலைமுடியுடன், எப்படி, உங்களால் அன்றாட பணிகளை கவனிக்க முடிகிறது?' என, கேட்டால், 'பழகிப் போய் விட்டது. இனிமேல், இறக்கும் வரை, முடியை வெட்டப் போவது இல்லை...' என்கிறார்.
— ஜோல்னா பையன்.
